ADDED : ஏப் 10, 2025 09:02 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புஞ்சையரசந்தாங்கல்:கிராமப்புறங்களில் உள்ள இளைஞர்கள் மற்றும் குழந்தைகளின் விளையாட்டுத் திறனை மேம்படுத்தும் வகையில், கூடைப்பந்து, கால்பந்து, ஹாக்கி, தடகளம், கைப்பந்து உள்ளிட்ட விளையாட்டுகளை விளையாடுவதற்காக ஊரக விளையாட்டு மையம் அமைக்கப்பட்டு வருகிறது.
அதன்படி, காஞ்சிபுரம் ஒன்றியம், புஞ்சையரசந்தாங்கல் ஊராட்சியில், மஹாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டம் 2024 - 25ன் கீழ், ஒரு லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை சார்பில், கைப்பந்து, கபடி, கிரிக்கெட் விளையாட்டிற்கான ஆடுகளம் அமைக்கப்பட்டு வருகிறது.
இப்பணி ஒரு மாதத்தில் முடிக்கப்பட்டு விளையாட்டு மையம் பயன்பாட்டிற்கு வரும் என, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை அலுவலர் ஒருவர் தெரிவித்தார்.