/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
காஞ்சி சர்வதீர்த்த குளத்தில் பாதுகாப்பு கேள்விக்குறி
/
காஞ்சி சர்வதீர்த்த குளத்தில் பாதுகாப்பு கேள்விக்குறி
காஞ்சி சர்வதீர்த்த குளத்தில் பாதுகாப்பு கேள்விக்குறி
காஞ்சி சர்வதீர்த்த குளத்தில் பாதுகாப்பு கேள்விக்குறி
ADDED : ஜன 17, 2024 09:50 PM
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாநகராட்சிக்குட்பட்ட, 3வது வார்டில், ஏகாம்பரநாதர் கோவிலுக்கு சொந்தமான சர்வதீர்த்த குளம் உள்ளது. 8 ஏக்கர் பரப்பில் மிகப்பெரிய குளமாக காட்சியளிக்கிறது. இக்குளத்திற்கு குளிக்கவும், துணி துவைக்கவும் பலர் வருகின்றனர்.
அப்போது தவறி விழுந்து பலர் இறக்க நேரிடுகிறது. கைப்பிடி உள்ளிட்ட பாதுகாப்பு அம்சங்கள் குறைவாக இருப்பதால், 2022ம் ஆண்டு இரு ஆண்களும், 2023ல் இரு ஆண்கள், ஒரு பெண் என மூவர் இறந்துள்ளனர்.
இரு ஆண்டுகளில் மட்டும், ஐந்து பேர் இக்குளத்தில் மூழ்கி இறந்துள்ளனர். இக்குளத்தில் உள்ள நீராழி மண்டபம், பூங்கா உள்ளிட்டவை, ஹிந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளால் முறையாக பராமரிக்காததால், குளம் பொலிவிழந்து காணப்படுகிறது.
குளத்தின் நீரில் மூழ்கி இறப்போர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிக்கிறது. பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என, பக்தர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
குளத்தில் மூழ்கி இறப்பதை தடுக்கும் வகையில், பாதுகாப்பு வேலிகள், கைப்பிடிகள் என பல்வேறு அம்சங்களை அமைக்க வேண்டும் என, கலெக்டரிடமும், ஹிந்து சமய அறநிலையத் துறையிடமும் கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.