தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ முத்துமாரியம்மனுக்கு கூழ்வார்த்தல் விழா

முத்துமாரியம்மனுக்கு கூழ்வார்த்தல் விழா

முத்துமாரியம்மனுக்கு கூழ்வார்த்தல் விழா


ADDED : ஆக 30, 2026 04:31 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 30, 2026 04:31 PM


Follow on Google
அ நிறம் | அளவு

காஞ்சிபுரம், ஆக. 31–

அருந்ததியர்பாளையத்தில், முத்துமாரியம்மன் கோவிலில் கூழ்வார்த்தல் நிகழ்ச்சி விமரிசையாக நேற்று நடந்தது.

காஞ்சிபுரம் அடுத்த, படுநெல்லி அருந்ததியர்பாளையம் கிராமத்தில், முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. ஆவணி திருவிழாவை முன்னிட்டு, நேற்று காலை, 9:00 மணி அளவில், 21 திரவியங்களால் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது.

பகல், 1:00 மணிக்கு கூழ்வார்த்தல் நிகழ்ச்சியும், மாலை பொன்னியம்மனுக்கு பொங்கலிடும் நிகழ்ச்சியும், மலர் அலங்காரமும் நடந்தது. இரவு, முத்துமாரியம்மனுக்கு மலர் அலங்காரமும், கும்ப படையலிடும் நிகழ்ச்சியும் நடந்தது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us