ADDED : அக் 13, 2024 12:42 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் அடுத்த, படுநெல்லி கிராமத்தை ஒட்டி செல்லும், விருத சீர நதியில் மணல் கடத்துவதாக, பொன்னேரிக்கரை போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அதன்படி, பொன்னேரிக்கரை காவல் உதவி ஆய்வாளர் கிஷோர் தலைமையில் போலீசார் கம்மவார்பாளையம் பகுதியில், நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது, வெவ்வேறு இருசக்கர வாகனங்களில் மணல் கடத்தி சென்ற படுநெல்லி கிராமத்தைச் சேர்ந்த 24 - 37 வயதுடைய நான்கு பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்த வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.