/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
சம்பா பட்ட நெல் நடவு பணி துவக்கம்
/
சம்பா பட்ட நெல் நடவு பணி துவக்கம்
ADDED : அக் 28, 2024 11:47 PM

உத்திரமேரூர் : உத்திரமேரூர் ஒன்றிய விவசாயிகள் நவரை, சொர்ணவாரி பருவத்தை தொடர்ந்து, சில நாட்களாக சம்பா பட்ட சாகுபடி பணிகளை துவக்கி உள்ளனர்.
உத்திரமேரூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட மருதம், ஆனம்பாக்கம், நீர்குன்றம், புலிவாய், அரும்புலியூர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள், கிணற்று பாசனத்தை கொண்டு உழவுப் பணிகளை முடித்து, தற்போது நெல் நடவு பணிகளை துவக்கி உள்ளனர்.
இதுகுறித்து, ஆனம்பாக்கம் விவசாயிகள் கூறியதாவது:
இந்த ஆண்டு சம்பா பட்டத்திற்கு பருவ மழையின் அளவை பொறுத்து சாகுபடி செய்ய திட்டமிட்டு இருந்தோம்.
ஆனால், இதுவரை பருவமழை தீவிரம் அடையவில்லை.
இதனால், கிணற்று பாசனம் வாயிலாக நெல் சாகுபடி செய்ய தீர்மானித்து நடவு பணிகளை துவக்கி உள்ளோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.