நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காஞ்சிபுரம்:ராணிப்பேட்டை மாவட்டம், கடப்பந்தாங்கல் காலனியைச் சேர்ந்தவர் சத்தியசீலன், 42. இவர், டிப்பர் லாரியில் 3 யூனிட் மணலை உரிய ஆவணங்கள் இன்றி, பாலுச்செட்டிசத்திரம் பஜார் வழியாக, காஞ்சிபுரத்திற்கு எடுத்து சென்றுள்ளார்.
பாலுச்செட்டிசத்திரம் போலீசார் வாகன சோதனையின் போது, உரிய ஆவணங்கள் இன்றி மணல் கடத்தியது தெரிய வந்தது. இதையடுத்து, சத்தியசீலனை கைது செய்து, மணல் கடத்தலுக்கு பயன்படுத்திய டிப்பர் லாரியை பறிமுதல் செய்தனர்.