/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
5 ஆண்டுகளில் கோடிக்கணக்கில் சுரண்டிய கனிமங்கள் மணல் லாரி உரிமையாளர்கள் சங்கம் புகார் மனு
/
5 ஆண்டுகளில் கோடிக்கணக்கில் சுரண்டிய கனிமங்கள் மணல் லாரி உரிமையாளர்கள் சங்கம் புகார் மனு
5 ஆண்டுகளில் கோடிக்கணக்கில் சுரண்டிய கனிமங்கள் மணல் லாரி உரிமையாளர்கள் சங்கம் புகார் மனு
5 ஆண்டுகளில் கோடிக்கணக்கில் சுரண்டிய கனிமங்கள் மணல் லாரி உரிமையாளர்கள் சங்கம் புகார் மனு
ADDED : ஜூலை 08, 2025 12:00 AM
காஞ்சிபுரம், காஞ்சிபுரம் மாவட்டத்தில், குவாரி, கிரஷர்களில், ஐந்து ஆண்டுகளில் கோடிக்கணக்கிலான மதிப்பில் கனிமங்கள் சுரண்டப்பட்டுள்ளதாக, மணல் லாரி உரிமையாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பினர், கலெக்டரிடம் நேற்று புகார் மனு அளித்தனர்.
காஞ்சிபுரம் மாவட்ட மக்கள் குறைதீர் கூட்டம், கலெக்டர் வளாக கூட்டரங்கில், கலெக்டர் கலைச்செல்வி தலைமையில் நேற்று நடந்தது.
இக்கூட்டத்தில், வேலைவாய்ப்பு, உதவித்தொகை, பட்டா, ஆக்கிரமிப்பு என, பல்வேறு வகையிலான கோரிக்கை மனுக்கள், 419 பேர் வழங்கினர். மனுக்களை பெற்ற, கலெக்டர் கலைச்செல்வி, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் வழங்கி, உரிய நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தினார்.
இக்கூட்டத்தில், தமிழ்நாடு மாநில மணல் லாரி உரிமையாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பின் தலைவர் யுவராஜ் அளித்த மனு விபரம்:
காஞ்சிபுரம் மாவட்டத்தில், குவாரி மற்றும் கிரஷர்கள் என, 162 நிறுவனங்களில், 28 மட்டுமே அனுமதி பெற்று இயங்குகின்றன.
இந்த குவாரி, கிரஷர்களில், ஐந்து ஆண்டுகளில் மட்டும் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான கனிமங்கள் வெட்டி எடுக்கப்பட்டுள்ளன.
அரசுக்கு பல ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது என்பதை, 'ட்ரோன்' மூலம் அளவீடு செய்ய வேண்டும். முறைகேடாக வெட்டி எடுக்கப்பட்ட கனிமங்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும்.
குவாரி, கிரஷர்களில் இருந்து எடுத்து வரப்படும் கனிமங்களுக்கு முறையான நடைச்சீட்டு உள்ளதா என்றபதை கண்காணிக்க வேண்டும். கனிமங்கள் ஏற்றி செல்லும் வாகனங்களில் ஜி.பி.எஸ்., கருவி உள்ளதா என்பதையும் கண்காணிக்க வேண்டும்.
குவாரி, கிரஷர்களில் நடக்கும் முறைகேடுகளுக்கு துணைபோகும் அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். கனிமவளத் துறையில் நடந்துள்ள ஊழல், முறைகேடுகளை தனிக்குழு ஒன்றை அமைத்து விசாரணை நடத்த வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.