/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
ஆஞ்சநேயருக்கு சந்தனகாப்பு அலங்காரம்
/
ஆஞ்சநேயருக்கு சந்தனகாப்பு அலங்காரம்
ADDED : டிச 04, 2024 12:42 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காஞ்சிபுரம்:பெருமாளின் 108 திவ்யதேசங்களின் ஒன்றான, சின்ன காஞ்சிபுரம் யதோக்தகாரி பெருமாள் கோவில் பின்புறம், திருவள்ளுவர் தெருவில் வீர ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இக்கோவிலில் 36வது கும்பாபிஷேக ஆண்டு விழா நேற்று நடந்தது.
விழாவையொட்டி நேற்று காலை 9:00 மணிக்கு மூலவருக்கு பால், தயிர், இளநீர், பஞ்சாமிர்தம், ஜவ்வாது, தேன் உள்ளிட்ட திரவியங்களால் சிறப்பு அபிேஷகம் நடந்தது. மதியம் 1:00 மணிக்கு சந்தனகாப்பும், வடமாலை சாற்றப்பட்டு ராஜ அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
தொடர்ந்து, மஹாதீப ஆராதனைம் நடந்தது.