/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
கச்சபேஸ்வரர் கோவிலில் சங்காபிஷேகம்
/
கச்சபேஸ்வரர் கோவிலில் சங்காபிஷேகம்
ADDED : மே 17, 2025 08:39 PM
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் கோவிலில், சித்திரை பெருவிழா விழா, கடந்த 4ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. முதல் நாள் விழாவில், காலை பவழக்கால் சப்பரத்திலும், மாலை சிம்ம வாகனத்திலும் கச்சபேஸ்வர் வீதியுலா வந்தார்.
ஐந்தாம் நாள் உத்சவமான கடந்த 8ம் தேதி காலை, அதிகார நந்தி வாகன உத்சவமும், இரவு திருக்கல்யாண உத்சவமும் நடந்தது.
ஏழாம் நாள் உத்சவமான கடந்த 10ம் தேதி காலை தேரோட்டமும், ஒன்பதாம் நாள் உத்சவமான கடந்த 12ம் தேதி இரவு முருக்கடி சேவை, தலமகிமை காட்சியும், 10ம் நாள் பிரபல உத்சவமான வெள்ளி தேரோட்டம் விமரிசையாக நடந்தது. 12ம் நாள் உத்சவமான கடந்த 15ம் தேதி இரவு, பஞ்சமூர்த்திகள் உத்சவம் நடந்தது.
இதில், 14ம் நாள் உத்சவமான, நேற்று காலை, 108 சங்காபிஷேகமும், மாலை 4:00 மணிக்கு அறுபத்துமூன்று நாயன்மார்கள் சிறப்பு திருமுழுக்கு வழிபாடும் நடந்தது. இன்று இரவு 8:00 மணிக்கு, ஊஞ்சல் உத்சவத்துடன் சித்திரை பெருவிழா நிறைவு பெறுகிறது.