/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
கனகபுரீஸ்வரர் கோவிலில் சங்காபிஷேகம்
/
கனகபுரீஸ்வரர் கோவிலில் சங்காபிஷேகம்
ADDED : ஜூலை 06, 2025 01:11 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உத்திரமேரூர்:களியாம்பூண்டி கனகபுரீஸ்வரர் கோவிலில் சங்காபிஷேக விழா நேற்று நடந்தது.
உத்திரமேரூர் தாலுகா, களியாம்பூண்டி கிராமத்தில் சொர்ணாம்பிகை சமேத கனகபுரீஸ்வரர் கோவில் உள்ளது. இங்கு, சிவராத்திரி, பிரதோஷம், பவுர்ணமி ஆகிய நாட்களில் சிறப்பு வழிபாடு நடப்பது வழக்கம். இக்கோவிலின், 2ம் ஆண்டு அபிஷேக நிறைவு விழாவை முன்னிட்டு, 108 சங்காபிஷேக விழா நேற்று விமரிசையாக நடந்தது.
முன்னதாக, காலை 8:00 மணிக்கு மூலவருக்கு நெய், பால், இளநீர், சந்தனம், பஞ்சாமிர்தம் ஆகியவற்றால் சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, காலை 11:30 மணிக்கு கனகபுரீஸ்வரருக்கு 108 சங்குகளால் அபிஷேகம் செய்யப்பட்டது.