/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
திரவுபதி அம்மனுக்கு சங்காபிஷேகம்
/
திரவுபதி அம்மனுக்கு சங்காபிஷேகம்
ADDED : டிச 09, 2024 01:12 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உத்திரமேரூர்:உத்திரமேரூர் ஒன்றியம், அழிசூர் கிராமத்தில் உள்ள திரவுபதி அம்மன் கோவிலில், கார்த்திகை மாத அஷ்டமியை முன்னிட்டு, சங்கு அபிஷேக வழிபாடு நடந்தது.
முன்னதாக, காலை 9:00 மணிக்கு மூலவருக்கு நெய், பால், தயிர், இளநீர், சந்தனம் ஆகியவற்றால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து, 11:00 மணிக்கு யாக சாலையில் வைத்து பூஜிக்கப்பட்ட, 108 சங்குகளால் அம்மனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. இதில், திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.