/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
ஓரிக்கை மார்க்கெட் வளாகத்தில் சகதிநீரால் சுகாதார சீர்கேடு
/
ஓரிக்கை மார்க்கெட் வளாகத்தில் சகதிநீரால் சுகாதார சீர்கேடு
ஓரிக்கை மார்க்கெட் வளாகத்தில் சகதிநீரால் சுகாதார சீர்கேடு
ஓரிக்கை மார்க்கெட் வளாகத்தில் சகதிநீரால் சுகாதார சீர்கேடு
ADDED : செப் 22, 2024 02:30 AM

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் ரயில்வே சாலையில் பழமையான கட்டடத்தில் இயங்கி வந்த ராஜாஜி மார்க்கெட் இடிக்கப்பட்டு, 7 கோடி ரூபாய் செலவில் புதிய கட்டடம் கட்டப்பட்டு கடந்த மாதம் திறக்கப்பட்டது. புதிய கட்டடம் கட்டுமானப் பணி, 2022ம் ஆண்டு துவங்கியது. இதையடுத்து ராஜாஜி மார்க்கெட் ஓரிக்கைக்கு தற்காலிகமாக இடமாற்றம் செய்யப்பட்டது.
ஓரிக்கையில் இயங்கும் தற்காலிக ராஜாஜி மார்க்கெட் பின்புறம் மழைநீர் வெளியேறாமல் ஒரே இடத்தில் தேங்குவதால் சகதி நீராக மாறியுள்ளது. அதில், உற்பத்தியாகியுள்ள கொசுக்களால் நோய் பரவும் சூழல் உள்ளது.
மேலும், மார்க்கெட்டிற்கு வந்து செல்லும் பொதுமக்கள், வியாபாரிகள் சகதிநீரில் நடந்து செல்ல வேண்டிய அவல நிலை உள்ளது.
எனவே, மார்க்கெட் பின்புறம் தேங்கியுள்ள சகதிநீரை அகற்றவும், மீண்டும் மழைநீர் தேங்காமல் இருக்க, மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.