தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ சம்பளம் உயர்த்தி வழங்க துாய்மை பணியாளர்கள் கோரிக்கை

சம்பளம் உயர்த்தி வழங்க துாய்மை பணியாளர்கள் கோரிக்கை

சம்பளம் உயர்த்தி வழங்க துாய்மை பணியாளர்கள் கோரிக்கை


ADDED : ஆக 31, 2026 07:33 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 31, 2026 07:33 PM


Follow on Google
அ நிறம் | அளவு

காஞ்சிபுரம், செப். 1–-

காஞ்சிபுரம் மாநகராட்சியில் துாய்மை பணியாளர்கள் தங்களுக்கு சம்பளம் உயர்த்தி வழங்க கோரிக்கை விடுத்துள்ளனர்.

காஞ்சிபுரம் மாநகராட்சியில், துாய்மை பணிகளை மேற்கொள்ள தனியார் ஒப்பந்த நிறுவனம் மூலம் 360 பேர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு ஒரு நாள் சம்பளமாக 565 ரூபாய் கணக்கிட்டு வழங்கப்பட வேண்டும் என கூறப்படுகிறது.

ஆனால், தற்போது ஒப்பந்த நிறுவனம் சார்பில் ஒரு நாளைக்கு 385 மட்டுமே வழங்கப்படுவதாக துாய்மை பணியாளர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

இதனால், அரசு நிர்ணயித்த தொகைக்கும், தங்களுக்கு வழங்கப்படும் சம்பளத்திற்கும் இடையே கணிசமான வேறுபாடு உள்ளதாக அவர்கள் கூறுகின்றனர்.

மேலும், ஒப்பந்த பணியாளர்களுக்கு சம்பளம் வழங்குவது தொடர்பாக மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில், அவற்றை மாநகராட்சி நிர்வாகம் முறையாக கண்காணித்து செயல்படுத்தவில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.

குறைந்த சம்பளத்தில் துாய்மை பணியாளர்கள் தொடர்ந்து பணியாற்றுவதால், அவர்களின் குடும்ப வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது. மாநகராட்சியின் துாய்மை பணியில் முக்கிய பங்காற்றும் இவர்களுக்கு, நிர்ணயிக்கப்பட்ட தினக்கூலி முழுமையாக கிடைப்பதை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

இதுகுறித்து, மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறியதாவது:

தனியார் ஒப்பந்த நிறுவனத்துடன் செய்துள்ள ஒப்பந்தம் அடிப்படையில் அவர்களுக்கு சம்பளம் வழங்கப்படுகிறது. நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்யும்போது அரசு விதியில் இருந்த சம்பளம் வழங்கப்படுகிறது.

அந்த நிறுவனத்துடன் தொடர்ந்து ஒப்பந்தம் புதுப்பிக்கப்படுகிறது. அதான், குறைத்து வழங்கப்படுவது போல தெரிகிறது.

இருப்பினும் இதுகுறித்து நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us