/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
துாய்மை பணியாளர்கள் கவுரவிப்பு
/
துாய்மை பணியாளர்கள் கவுரவிப்பு
ADDED : ஜன 13, 2026 06:18 AM
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அன்னசத்திரம் தன்னார்வ அமைப்பு சார்பில், பொங்கல் பண்டிகையையொட்டி துாய்மை பணியாளர்களுக்கு நினைவுப்பரிசு வழங்கி கவுரவிக்கப்பட்டனர்.
காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் 16 கால் மண்டபம் அருகில், 'விழுதுகள்' என்ற தன்னார்வ அமைப்பு சார்பில், 2020ம் ஆண்டு, 'காஞ்சி அன்ன சத்திரம்' துவக்கப்பட்டது.
இங்கு தினமும், மூன்று வேளையும் முதியோர், ஆதரவற்றோர், சாலையோரம் வசிப்போர் மாற்றுத்திறனாளிகளுக்கு உணவு வழங்கி வருகின்றனர்.
ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகையையொட்டி, தன்னலம் கருதாமல் பணிபுரியும் மாநகராட்சி துாய்மை பணியாளர்களுக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டு கவுரவிக்கப்பட்டு வருகின்றனர்.
அதன்படி நடப்பாண்டு பொங்கல் பண்டிகையை யொட்டி துாய்மை பணியாளர்களுக்கு கவுரவிக்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது.
இதில், காஞ்சிபுரம் மாநகராட்சி கமிஷனர் பாலசுப்பிரமணியம், சிவ காஞ்சி எஸ்.ஐ., கிரி ஆகியோர் துாய்மை பணியாளர்களுக்கு நினைவு பரிசு வழங்கி கவுரவித்தனர்.

