தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/மரக்கன்று நடும் விழா

மரக்கன்று நடும் விழா

மரக்கன்று நடும் விழா


ADDED : ஏப் 24, 2024 12:33 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 24, 2024 12:33 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் இந்திய மருத்துவ சங்க பெண் மருத்துவர்கள் பிரிவு மற்றும் பசுமை இந்தியா அறக்கட்டளை சார்பில் உலக பூமி தினத்தையொட்டி மரக்கன்று நடும் விழா மேல்கதிர்பூரில் நடந்தது.

காஞ்சிபுரம் இந்திய மருத்துவ சங்க தலைவர் டாக்டர் சு.மனோகரன் தலைமை வகித்தார். மாநில குழு உறுப்பினர் டாக்டர் பி.டி.சரவணன் முன்னிலை வகித்தார்.

பெண் மருத்துவர்கள் பிரிவு தலைவர் டாக்டர் எம்.நிஷாப்ரியா, முன்னாள் தலைவர்கள் டாக்டர் ஜி.லஷ்மி விஜயசங்கர், டாக்டர் புஷ்பா, பசுமை இந்தியா அறக்கட்டளையின் நிறுவனர் மேகநாதன், நிர்வாகி மாணிக்கம் ஆகியோரின் ஏற்பாட்டின்படி மேல்கதிர்பூர் கிராமத்தில் அழிஞ்சல், இலுப்பை, பூவரசன், நாவல், வேம்பு, மகிழம், ஆற்றுபூவரசு உள்ளிட்ட 50 நிழல் தரும் மரக்கன்றுகள் நடப்பட்டன.

மேலும், பறவைகள், விலங்குகள் தண்ணீர் குடிப்பதற்காக, மருத்துவர்களின் வீட்டு வாசலிலும், மாடிகளிலும் மண்தொட்டிகள் வைக்கப்பட்டு தண்ணீர் நிரப்பப்பட்டன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us