/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
ஒரக்காட்டுப்பேட்டை பள்ளியில் மரக்கன்றுகள் நடும் விழா
/
ஒரக்காட்டுப்பேட்டை பள்ளியில் மரக்கன்றுகள் நடும் விழா
ஒரக்காட்டுப்பேட்டை பள்ளியில் மரக்கன்றுகள் நடும் விழா
ஒரக்காட்டுப்பேட்டை பள்ளியில் மரக்கன்றுகள் நடும் விழா
ADDED : ஆக 04, 2025 11:46 PM

ஒரக்காட்டுப்பேட்டை,ஒரக்காட்டுப்பேட்டை அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நடும் விழா நேற்று நடந்தது.
உத்திரமேரூர் ஒன்றியம், ஒரக்காட்டுப்பேட்டையில் அரசு மேல்நிலைப் பள்ளி இயங்குகிறது.
இப்பள்ளி வளாகத்தில் உள்ள பள்ளிக்கு சொந்தமான காலி மனையில் மரக்கன்றுகள் நடவு செய்ய திட்டமிடப்பட்டது.
அதன்படி, விதைகள் தன்னார்வ அமைப்பு மற்றும் எஸ்.ஆர்.எம்., அறிவியல் தொழில்நுட்ப கல்லுாரி சார்பில் நேற்று மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடந்தது.
வாகை, வேங்கை, மகாகனி, புங்கன், அரச மரம், ஆலமரம், வேம்பு உள்ளிட்ட வகைகளைச் சேர்ந்த 200 மரக்கன்றுகள் முதற்கட்டமாக நடப்பட்டது.
மேலும், செண்பகம், செல்வரத்தம், நத்தியாவட்டை உள்ளிட்ட நறுமணம் கொண்ட அழகிய பூவகை செடிகளும் நடப்பட்டன.
அப்பள்ளி தலைமை ஆசிரியர் நிர்மலாதேவி தலைமையில் நடந்த இந்நிகழ்ச்சியில், விதைகள் தன்னார்வ அமைப்பாளர் பசுமை சரண், நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் மகேஸ்வரி உட்பட பலர் பங்கேற்றனர்.
பள்ளி மாணவ - மாணவியர் மரக்கன்றுகளை நடவு செய்தனர்.