/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
சோமாஸ்கந்தர் சிலை மாயம் வழக்கில் எஸ்.பி., விசாரணை
/
சோமாஸ்கந்தர் சிலை மாயம் வழக்கில் எஸ்.பி., விசாரணை
ADDED : பிப் 17, 2024 11:51 PM
காஞ்சிபுரம், காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலுக்கு, கிருஷ்ணதேவராயர் காலத்தில், நன்கொடையாக 10 சிலைகள் வழங்கப்பட்டன. இதில், சோமாஸ்கந்தர் சிலையும் ஒன்று. சில மாதங்களுக்கு முன் அந்த சிலை காணாமல் போனது.
இதுகுறித்து, காஞ்சிபுரம் தாமல்வார் தெருவைச் சேர்ந்த டில்லிபாபு, சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அலுவலகத்தில் புகார் அளித்திருந்தார்.
சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார், புகார்தாரரை சென்னை மற்றும் திருச்சி அலுவலகங்களுக்கு விசாரணைக்கு அழைத்துள்ளனர்.
விசாரணைக்கு செல்லும் போதேல்லாம், புகார்தாரருக்கு அதிக பணம் செலவிட வேண்டி உள்ளது. சிலை திருடு போன காஞ்சிபுரத்தில், விசாரணை நடத்த வேண்டும் என, புகார்தாரர் கோரிக்கை விடுத்திருந்தார்.
அதன்படி, காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில், சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் எஸ்.பி., சிவக்குமார், நேற்று புகார்தாரரிடம் விசாரணை நடத்தினார். அப்போது, புகார்தாரர் தரப்பில் உரிய ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்டது.
இதையடுத்து, கோவில் நிர்வாகம், காவல் துறையினர் விசாரணை செய்ய உள்ளதாக புகார்தாரரிடம் உறுதியளித்துள்ளார்.