/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
எஸ்.பி., அலுவலக வளாகத்தில் உலர்ந்த மரக்கிளைகள் அகற்றம்
/
எஸ்.பி., அலுவலக வளாகத்தில் உலர்ந்த மரக்கிளைகள் அகற்றம்
எஸ்.பி., அலுவலக வளாகத்தில் உலர்ந்த மரக்கிளைகள் அகற்றம்
எஸ்.பி., அலுவலக வளாகத்தில் உலர்ந்த மரக்கிளைகள் அகற்றம்
ADDED : அக் 05, 2024 10:54 PM

காஞ்சிபுரம், காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலக வளாகத்தில், மாவட்ட காவல் கண்காணிப்பளார் அலுவலகம் இயங்கி வருகிறது. அதே வளாகத்தில், அனைத்து மகளிர் காவல் நிலையம் மற்றும் காவலர் உணவகம் செயல்பட்டு வருகிறது.
இந்த உணவகத்திற்கு காஞ்சிபுரம் மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளிக்க வரும் மக்கள் மற்றும் அரசு ஊழியர்கள் பலர் வந்து செல்கின்றனர்.
இந்த உணவக கட்டடம் அருகே, பூவரசன் மரம் உலர்ந்த நிலையில் உள்ளது. பலமாக காற்று அடித்தால், மரக்கிளை முறிந்து விழும் அபாய நிலையில் இருந்தது.
இதை, காவல் துறையினர் ராட்சத இயந்திரத்தின் வாயிலாக மரக்கிளைகளை அகற்றினர். இதனால், வட கிழக்கு பருவ மழைக்கு பலமாக காற்று அடித்தாலும், மரக்கிளைகள் விழுவது முற்றிலும் தடுக்கப்பட்டு உள்ளது என, காவல் துறையினர் தெரிவித்தனர்.