நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வாலாஜாபாத்,:வாலாஜாபாத் ஒன்றியம், தேவரியம்பாக்கத்தில் இயங்கும் அரசு உயர்நிலைப் பள்ளியில், 2023- - 24ம் ஆண்டுக்கான ஆண்டு விழா நேற்று முன்தினம் நடந்தது.
நிகழ்ச்சிக்கு, பள்ளி தலைமை ஆசிரியர் எழில் தலைமை தாங்கினார். ஆண்டு விழாவையொட்டி, முன்னதாக மாணவர்களுக்கு கட்டுரை, பாட்டு, ஓவியம் வரைதல், திருக்குறள் ஒப்புவித்தல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடைபெற்றன.
போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ - மாணவியருக்கு, அப்பகுதி ஊராட்சி தலைவர் அஜய் பரிசுகள் வழங்கினார்.
தொடர்ந்து, மாணவியரின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

