
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் கா.மு.சுப்பராய முதலியார் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியின் 91வது ஆண்டு விழா தலைமை ஆசிரியை ஜெயலட்சுமி தலைமையில் நேற்று முன்தினம் நடந்தது.
வட்டார வளமைய மேற்பார்வையாளர் குளோரி, வட்டார கல்வி அலுவலர்கள் கண்ணன், ரவி, மாநகராட்சி கவுன்சிலர் சூர்யா சோபன்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில், பள்ளி மாணவ - மாணவியரின் குழு நடனம், வில்லுப்பாட்டு என, பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடந்தன.
இப்பள்ளியில் பயின்ற முன்னாள் மாணவரான சென்னை தலைமையகம், தொழில்நுட்ப சேவை பிரிவு டி.எஸ்.பி., சீனிவாசன், பல்வேறு போட்டிகள் மற்றும் கலைநிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவ- - மாணவியருக்கு பரிசு வழங்கினார்.