
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உத்திரமேரூர்:உத்திரமேரூர் ஒன்றியம், மேட்டுப்பாளையம் கிராமத்தில், ஐ.ஆர்.டி.டி., துவக்கப் பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளியில் 42வது ஆண்டு விழா நடந்தது.
நிகழ்ச்சிக்கு பள்ளி தாளாளர் வெங்கடாச்சலம் தலைமை தாங்கினார். காரணை ஊராட்சி தலைவர் கீதா, சமூக ஆர்வலர் சோழனூர் ஏழுமலை முன்னிலை வகித்தனர்.
அதில், பள்ளி மாணவர்களின் யோகா பயிற்சி மற்றும் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடந்தன. தொடர்ந்து, விளையாட்டு போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

