ADDED : மார் 02, 2026 05:22 AM

உத்திரமேரூர்: பெருநகர் ஆதித்யா மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி மற்றும் மானாம்பதி ஆதித்யா வித்யாலயா சி.பி.எஸ்.இ., பள்ளி 11வது ஆண்டு விழா நேற்று நடந்தது.
உத்திரமேரூர் அடுத்த பெருநகரில் இயங்கி வரும் ஆதித்யா மெட்ரிக்குலேஷன் பள்ளி, மானாம் பதியில் உள்ள ஆதித்யா வித்யாலயா சி.பி.எஸ்.இ., பள்ளி என, இரு பள்ளிகளின் 11வது ஆண்டு விழா பெருநகர் பள்ளி வளாகத்தில் நேற்று நடந்தது.
அரக்கோணம் குழந்தை நல சிறப்பு மருத்துவர் ராவணன் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.
ஒருங்கிணைப்பாளர் நிவேதிதா வரவேற்றார். தாளாளர் காந்திமதி சிறப்புரையாற்றினார். துவாரகா அறக்கட்டளை தலைவர் அழகுநடேசன் முன்னிலை வகித்தார்.
நிர்வாக உறுப்பினர் வாசுதேவன் வாழ்த்துரை வழங்கினார். பொருளாளர் செந்தில்குமார் ஆண்டறிக்கை வாசித்தார்.
இதில், பள்ளி மாணவ- - மாணவியரின் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடந்தது. செயலர் விஸ்வநாதன் நன்றி கூறினார்.
