ADDED : மார் 15, 2026 05:46 AM
அ நிறம் | அளவு
காஞ்சிபுரம்: சின்ன காஞ்சிபுரம் ஸ்ரீகிருஷ்ணா நிதி நாடும் நடுநிலை பள்ளியின் 96வது ஆண்டு விழா தனியார் திருமண மண்டபத்தில் நேற்று நடந்தது.
இதில், பள்ளி மாணவ- - மாணவியரின் பேச்சு, கட்டுரை, ஓவியம், நடனம், மாறு வேடம், தனி நடிப்பு என, பல்வேறு கலை நிகழ்ச்சி, விளையாட்டு போட்டிகள் நடந்தன.
வெற்றி பெற்ற மாணவ- - மாணவியருக்கு சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்ற காஞ்சிபுரம் மாநகராட்சி தி.மு.க., கவுன்சிலர்கள் கமலக்கண்ணன், குமரன் ஆகியோர் பரிசு வழங்கினர்.
பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் மோகன், பள்ளி நிர்வாக குழு தலைவர் சுசீலாபாய் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தலைமை ஆசிரியர் சுதா வரவேற்றார்.
