ADDED : மார் 19, 2026 08:17 PM

அ நிறம் | அளவு
உத்திரமேரூர்:உத்திரமேரூரில், 1961ம் ஆண்டு முன்னாள் முதல்வர் காமராஜரால் துவக்கப்பட்ட ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியின் 65வது ஆண்டு விழா நேற்று நடந்தது.
காஞ்சிபுரம் மாவட்ட கல்வி அலுவலர் எழில் தலைமை வகித்தார். வட்டார கல்வி அலுவலர் நாராயணசாமி, பள்ளி மேலாண்மை குழு தலைவர் மகாலட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளி தலைமை ஆசிரியை சந்தானலட்சுமி வரவேற்றார்.
இதில், எல்.கே.ஜி., சிறுவர் - சிறுமியருக்கு பட்டம் வழங்கப்பட்டது. பள்ளியில் பயிலும் அனைத்து மாணவ - மாணவியருக்கும் வழக்கறிஞர் அருள்ஒளி திருக்குறள் புத்தகங்களை வழங்கினார்.
இதில், மாணவ - மாணவியரின், ஒடிஷா மாநில நடனம், காவடி, பரத நாட்டியம், சிலம்பம், நாட்டுப்புற நடனம், ஆதிவாசிகள் நடனம் உள்ளிட்டவை நடந்தன.
