/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
காஞ்சியில் மாற்றுத்திறனாளிகள் சங்க இரண்டாவது மாநாடு
/
காஞ்சியில் மாற்றுத்திறனாளிகள் சங்க இரண்டாவது மாநாடு
காஞ்சியில் மாற்றுத்திறனாளிகள் சங்க இரண்டாவது மாநாடு
காஞ்சியில் மாற்றுத்திறனாளிகள் சங்க இரண்டாவது மாநாடு
ADDED : ஜூலை 27, 2025 09:58 PM
காஞ்சிபுரம்:தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்க, காஞ்சிபுரம் மாநகர இரண்டாவது மாநாடு காஞ்சிபுரத்தில் நேற்று நடந்தது.
காஞ்சிபுரம் விளக்கடி கோவில் தெருவில் நடந்த மாநாட்டிற்கு, மாநகர தலைவர் லோகநாயகி தலைமை வகித்தார். மாநில தலைவர் வில்சன் துவக்க உரையாற்றினார். விவசாயிகள் சங்க மாநில துணைத் தலைவர் நேரு, மாவட்ட தலைவர் பாலாஜி உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினர்.
இதில், வீடு இல்லாத அனைத்து மாற்றுத்திறனாளிகளுக்கும் இலவச வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும். வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் மாதந்தோறும் மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு குறை தீர்க்கும் கூட்டம் நடத்த வேண்டும்.
அனைத்து மாற்றுத்திறனாளி குடும்ப அட்டையை, 'அந்த்யோதயா அன்னயோஜனா' வகையாக மாற்ற வேண்டும். உதவித்தொகை விண்ணப்பித்து காத்திருக்கும் அனைத்து மாற் றுத்திறனாளிகளுக்கும் உடனடியாக உதவித் தொகையை வழங்க வேண்டும்.
கிராமங் களில் தேசிய ஊரக வளர்ச்சி துறையில் வழங்கப்படும் நுாறு நாள் வேலை நகர்ப்புறத்திலும் வழங்க வேண்டும். அனைத்து அரசு அலுவலங்களிலும், வரவேற்பாளர் மாற்றுத்திறனாளிகளை பணி அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.