/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
காஞ்சிபுரத்தில் சுயதொழில் விழிப்புணர்வு சந்தை
/
காஞ்சிபுரத்தில் சுயதொழில் விழிப்புணர்வு சந்தை
ADDED : பிப் 15, 2024 10:00 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் பச்சையப்பன் மகளிர் கல்லுாரியில், வணிகவியல் துறை சார்பில், சுய தொழில் விழிப்புணர்வு சந்தை நடந்தது.
கல்லுாரி முதல்வர் முனைவர் கோமதி, சிறப்பு விருந்தினர்கள் வனிதா வினோத், பிரேமா, சபிதா கிரி ஆகியோர் சந்தையை துவக்கி வைத்தனர்.
இதில், கல்லுாரி மாணவியர் தங்களின் வணிக திறமையை வெளிப்படுத்தும் வகையில், தாங்களே சுயமாக தயாரித்த, குளிர்பானம், கூழ் வகைகள், பழரசம், அணிகலன்கள் என, 64 வகையான கடைகளை அமைத்திருந்தனர்.