காஞ்சிபுரம்,:உலக தற்கொலை தடுப்பு தினத்தையொட்டி, காஞ்சிபுரம் இந்திய மருத்துவ சங்கத்தின் சார்பில், மருத்துவர்களுக்கான கருத்தரங்கம் நடந்தது.
கருத்தரங்கிற்கு தலைமை வகித்த காஞ்சிபுரம் இந்திய மருத்துவ சங்க தலைவர் டாக்டர் சு. மனோகரன், ‛தற்கொலை குறித்தான பார்வையில் மாற்றத்தை ஏற்படுத்துதல்' என்ற தலைப்பில் கருத்தரங்க உரையாற்றினார்.
சென்னை சிம்ஸ் மருத்துவமனை சிறப்பு மருத்துவ வல்லுனர்கள் டாக்டர் பி. அன்பழகன் ரோபோட்டிக் தொழில்நுட்பம் வாயிலாக வயிறு மற்றும் உணவு மண்டல அறுவை சிகிச்சை என்ற தலைப்பிலும், டாக்டர் சாய்ராம் சுப்ரமணியம் ‛வெரிகோஸ் வெய்ன்கள்' குறித்த கட்டு கதைகளை முறியடித்தல் என்ற தலைப்பிலும் உரையாற்றினர்.
மருத்துவ கல்வி செயலர் டாக்டர் ந.சு. ராதாகிருஷ்ணன் அறிமுக உரையாற்றினார். இணை செயலர் டாக்டர் வெ. முத்துக்குமரன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். மதிப்புறு செயலர் டாக்டர் கா.சு. தன்யகுமார் நன்றி கூறினார்.