/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
மருத்துவர்களுக்கான கருத்தரங்கம்
/
மருத்துவர்களுக்கான கருத்தரங்கம்
ADDED : அக் 27, 2024 07:54 PM
காஞ்சிபுரம்:உலக பக்கவாத தினத்தையொட்டி, காஞ்சிபுரம் இந்திய மருத்துவ சங்கம் சார்பில், மருத்துவர்களுக்கான கருத்தரங்கம், விருது பெற்ற மருத்துவர்களுக்குப் பாராட்டு விழா மற்றும் செயற்குழு கூட்டம் காஞ்சிபுரம் இந்திய மருத்துவ சங்க தலைவர் டாக்டர் சு.மனோகரன் தலைமையில் நேற்று நடந்தது.
இந்திய மருத்துவ சங்க தமிழ்நாடு கிளையின் மாநில அளவிலான வாழ்நாள் சாதனையாளர் விருது பெற்ற மூத்த குழந்தை நல மருத்துவரும், மாநில குழு உறுப்பினருமான டாக்டர் வே. சந்திரசேகரன், இளம் மருத்துவர் கூட்டமைப்பு மற்றும் மருத்துவ மாணவர் கூட்டமைப்பின் ஆசான் 2024 விருது பெற்ற மனநலத்துறை பேராசிரியர் டாக்டர் ம. அர்த்தநாரி ஆகியோர் விழாவில் கவுரவிக்கப்பட்டனர்.
சென்னை வடபழனி காவேரி மருத்துவமனையின் சிறப்பு மருத்துவ வல்லுனர் டாக்டர் சுவாமிநாதன் சம்பந்தம் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் சமீபத்திய கண்டுபிடிப்புகள் என்ற தலைப்பிலும் டாக்டர் பி. மகேஷ்பாபு கால்சியம் படிந்த இதய தமனி நோய்களுக்கான அறுவை சிகிச்சையில்லாத ரத்த நாளம் வழியிலான சிகிச்சைகள் என்ற தலைப்பிலும் கருத்தரங்க உரையாற்றினர். தொடர்ந்து செயற்குழு கூட்டம் நடந்தது.