/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
மருத்துவர்களுக்கான கருத்தரங்கம்
/
மருத்துவர்களுக்கான கருத்தரங்கம்
ADDED : ஏப் 25, 2025 10:09 PM
காஞ்சிபுரம்:இந்திய மருத்துவ சங்கம் காஞ்சிபுரம் கிளை மற்றும் காவேரி மருத்துவமனை சார்பில், மருத்துவர்களுக்கான தொடர் கருத்தரங்கம் சங்க தலைவர் டாக்டர் ரவி தலைமையில் நடந்தது.
செயலர் டாக்டர் முத்துக்குமரன் முன்னிலை வகித்தார். இதில், எலும்பியல் நிபுணர் டாக்டர் ரவிசங்கர் மூட்டு மாற்று சிகிச்சை மற்றும் எலும்பு மூட்டுகளை எப்படி ஆரோக்கியமாக வைத்திருப்பது என்பது குறித்து கருத்தரங்க உரையாற்றினார்.
நரம்பியல் நிபுணர் டாக்டர் அருள்மொழி, வலிப்பு நோய் ஏற்படக்கூடிய காரணங்கள், வலிப்பு நோயின் வெவ்வேறு வகைகள் மற்றும் அதற்கான நவீன சிகிச்சை முறைகள் குறித்து பேசினார்.
பெண்கள் மருத்துவ பிரிவில் மாநில விருது பெற்ற துணை புரவலர் டாக்டர் விக்டோரியா கவுரவிக்கப்பட்டார். முன்னாள் தலைவர் டாக்டர் மனோகரன், புரவலர் டாக்டர் ஜீவானந்தம், டாக்டர் தண்யகுமார் உட்பட பல மருத்துவர்கள் பங்கேற்றனர்.