நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஏனாத்துார்: காஞ்சிபுரம் சங்கரா கல்லுாரியில், 'தொழில் முன்னேற்றம்' என்ற தலைப்பிலான கருத்தரங்கம் நேற்று நடந்தது.
காஞ்சிபுரம் அடுத்த, ஏனாத்துாரில் உள்ள சங்கரா கலை மற்றும் அறிவியல் கல்லுாரி, 'யங் இந்தியன்ஸ்' அமைப்புடன் இணைந்து மாணவர்கள் பயன்பெறும் வகையில், உடல் ஆரோக்கியம், பொருளாதாரம், தொழில் முன்னேற்றம் உள்ளிட்ட தலைப்புகளில் கருத்தரங்கம் கல்லுாரி கருத்தரங்க அறையில் நேற்று நடந்தது.
'யங் இந்தியன்ஸ்' காஞ்சி பிரிவின் தலைவர் ஜெய விக்னேஷ் வரவேற்றார். கல்லுாரி முதல்வர் கலைராம வெங்கடேசன் தலைமை வகித்தார்.
இதில், பல்வேறு துறை வல்லுனர்கள் பங்கேற்று, மாணவர்கள் பயன்பெறும் வகையில் உடல் ஆரோக்கியம், பொருளாதார, தொழில் முன்னேற்றம் உள்ளிட்ட தலைப்புகளில் உரையாற்றினர். இதில், 200க்கும் மேற்பட்ட மாணவ - மாணவியர் பங்கேற்றனர்.

