ADDED : ஏப் 20, 2026 10:35 PM
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் சந்திரசேகரேந்திர சரஸ்வதி விஸ்வ மஹா வித்யாலயா நிகர்நிலை பல்கலையின் கணினி அறிவியல் பயன்பாட்டு துறை சார்பில், ‛எலைட் 2- கே 26' தேசிய அளவிலான தொழில்நுட்ப கருத்தரங்கம் நேற்று நடந்தது.
பல்கலை துணைவேந்தர் முனைவர் ஸ்ரீனிவாசு, இணை துணைவேந்தர் முனைவர் வசந்த்குமார் மேத்தா, ஸ்பெக்ட்ரம் 7 டெக்னாலஜிஸ் மேனேஜரிங் டைரக்டர் . சித்தார்த், ரேபிட் கோ குரூப் சி.இ.ஓ., ருக்மணி நட்ராஜ் ஆகியோர் கருத்தரங்கை துவக்கி வைத்தனர்.
கணினி அறிவியல் மற்றும் பயன்பாட்டுத் துறை தலைவர் ரமேஷ் வரவேற்புரையாற்றினார்.
கணினி அறிவியல் மாணவ -- மாணவியர் தற்போதைய சூழலில் வேலை வாய்ப்பு மேலும் இணையம் மற்றும் இணையவலை பாதுகாப்பு என்ற தலைப்பில் சிறப்பு விருந்தினர்கள் கருத்தரங்க உரையாற்றினர்.
இதில், பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. துறைத் தலைவர் ரமேஷ் பரிசு வழங்கினார்.
