/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
பட்டு வளர்ச்சி துறை: ஓய்வு பெற்றவர்கள் சந்திப்பு
/
பட்டு வளர்ச்சி துறை: ஓய்வு பெற்றவர்கள் சந்திப்பு
ADDED : ஜூலை 07, 2025 12:26 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காஞ்சிபுரம்:பட்டு வளர்ச்சி துறையில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற அலுவலர்கள் சந்திப்பு கூட்டம் நேற்று காஞ்சிபுரத்தில் நடந்தது.
காஞ்சிபுரம் தனியார் பார்ட்டி ஹாலில், 1980ம் ஆண்டு பட்டு வளர்ச்சி துறையில் ஒசூரில் பயிற்சி பெற்று, அதே துறையில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற அலுவலர்கள் சந்திப்பு மற்றும் கலந்தாய்வு கூட்டம் நேற்று நடந்தது.
இந்த கலந்தாய்வு கூட்டத்திற்கு, பட்டு வளர்ச்சி துறையில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற பொன்னம்பலம் வரவேற்றார். இந்த கூட்டத்திற்கு வந்திருந்த பட்டு வளர்ச்சி துறையில் ஓய்வு பெற்ற, 20 நபர்கள் தங்களின் பழைய நினைவுகளை பகிர்ந்து கொண்டனர்.