/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
'பிளேஸ்' வாலிபால் பைனலில் சேதுபாஸ்கரா- செயின்ட் பீட்ஸ்
/
'பிளேஸ்' வாலிபால் பைனலில் சேதுபாஸ்கரா- செயின்ட் பீட்ஸ்
'பிளேஸ்' வாலிபால் பைனலில் சேதுபாஸ்கரா- செயின்ட் பீட்ஸ்
'பிளேஸ்' வாலிபால் பைனலில் சேதுபாஸ்கரா- செயின்ட் பீட்ஸ்
ADDED : டிச 05, 2024 01:57 AM

சென்னை, 'பிளேஸ் வாலிபால் லீக்' போட்டியில், சாந்தோம் செயின்ட் பீட்ஸ் - அம்பத்துார் சேது பாஸ்கரா பள்ளி அணிகள் இறுதிப்போட்டியில் பலப் பரீட்சை நடத்துகின்றன.
மாநிலத்தில் முதல் முறையாக, 'பிளேஸ் வாலிபால் லீக்' முதலாவது சீசன் போட்டிகள், சென்னையில் பல்வேறு பள்ளிகளில் நடந்துவந்தது.
இந்த சீசனில், செயின்ட் பீட்ஸ், செயின்ட் மேரீஸ், மான்ட்போர்டு, டான்பாஸ்கோ, ஏ.ஜே.எஸ்., -கொட்டிவாக்கம், ஒய்.எம்.சி.ஏ.,- சேது பாஸ்கரா, செயின்ட் பீட்டர்ஸ் என, எட்டு அணிகள் பலப் பரீட்சை நடத்தின.
போட்டிகள், கடந்த ஆகஸ்ட்டில் துவங்கி, 'லீக்' முறையில், ஒவ்வொரு வாரமும் வெவ்வேறுபள்ளிகளில், போட்டிகள்நடத்தப்பட்டன.மொத்தம், 56 'லீக்' ஆட்டங்களின் முடிவில், செயின்ட் பீட்டர்ஸ், அம்பத்துார் சேது பாஸ்கரா, பெரம்பூர் டான்பாஸ்கோ, சாந்தோம் செயின்ட் பீட்ஸ் அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்றன.
கடந்த இரு நாட்கள் நடந்த அரையிறுதி முதல் ஆட்டத்தில், சேதுபாஸ்கரா அணி, 25 - 14, 25 - 21, 25 - 21 என்ற கணக்கில், டான்பாஸ்கோ பள்ளியை தோற்கடித்து,இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.
மற்றொரு அரையிறுதியில், பலமான செயின்ட் பீட்ஸ், செயின்ட் பீட்டர்ஸ் அணிகள் எதிர்கொண்டன. விறுவிறுப்பான போட்டியில், துவக்கத்தில் இருந்தே இரு அணிகளும் விட்டுக்கொடுக்காமல் புள்ளிகளை குவித்து, இதுவரை இல்லாத வகையில் ஐந்து, 'செட்'கள் வரை சென்றது.
முடிவில், 16 - 25, 25 - 18, 25 - 22, 22 - 25, 15 - 7 என்ற கணக்கில், செயின்ட் பீட்ஸ் அணி போராடி வெற்றி பெற்று, இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. நாளை காலை சாந்தோம் பள்ளியில், இறுதிப் போட்டி நடக்கிறது.