/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
மின் அலுவலகத்தில் கழிவுநீர் தேக்கம் பஞ்சுபேட்டையில் சுகாதார சீர்கேடு
/
மின் அலுவலகத்தில் கழிவுநீர் தேக்கம் பஞ்சுபேட்டையில் சுகாதார சீர்கேடு
மின் அலுவலகத்தில் கழிவுநீர் தேக்கம் பஞ்சுபேட்டையில் சுகாதார சீர்கேடு
மின் அலுவலகத்தில் கழிவுநீர் தேக்கம் பஞ்சுபேட்டையில் சுகாதார சீர்கேடு
ADDED : நவ 23, 2025 01:53 AM

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் பஞ்சுபேட்டை பெரிய தெருவில், பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டு சாலையில் வழிந்தோடிய கழிவுநீர், மின்வாரிய அலுவலக வளாகத்தை சூழ்ந்ததால் அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்படும் நிலை உள்ளது.
காஞ்சிபுரம் மாநகராட்சி, பஞ்சுபேட்டை பெரிய தெருவில், மின்வாரிய துணை மின்நிலையம், திரவுபதியம்மன் கோவில், நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் மட்டுமின்றி 100க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன.
காஞ்சிபுரம் புதிய ரயில் நிலையம், ஒலிமுகமதுபேட்டை, ஏகாம்பரநாதர் கோவில், கருப்படிதட்டடை உள்ளிட்ட பகுதிக்கு செல்வோர் இச்சாலையை பயன்படுத்துகின்றனர்.
வாகன போக்குவரத்தும், பொதுமக்கள் நடமாட்டமும் மிகுந்த இச்சாலையில், பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டு வெளியேறிய கழிவுநீர், ஒரு வாரமாக பஞ்சுபேட்டை துணை மின்நிலைய வளாகத்திற்குள் பெருக்கெடுத்து ஓடுகிறது.இதனால், பஞ்சுபேட்டை துணை மின்நிலையத்தில் தேங்கும் கழிவுநீரால் மின் ஊழியர்கள், கழிவுநீரில் நடந்து செல்ல வேண்டிய அவலநிலை உள்ளது.
தொடர்ந்து வெளியேறும் கழிவுநீரால் அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்படும் நிலை உள்ளது.
எனவே, பஞ்சுபேட்டை பெரிய தெருவில், பாதாள சாக்கடையில் ஏற்பட்டுள்ள அடைப்பை முழுதும் நீக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

