/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
நீர்வரத்து கால்வாயில் கழிவுநீர் லாரி ஓட்டுநர்கள் அட்டூழியம் செம்பரம்பாக்கம் ஏரி குடிநீர் தரம் கேள்விக்குறி

ADDED : ஜூலை 02, 2025 11:31 PM

திருமழிசை:சென்னை - பெங்களூரு அதிவிரைவு தேசிய நெடுஞ்சாலையோரம், செம்பரம்பாக்கம் ஏரிக்கு செல்லும் நீர்வரத்து கால்வாயில் கழிவுநீர் கொட்டப்படுவதால், குடிநீர் தரம் பாதிக்கப்பட்டு வருவதாக பகுதிவாசிகள் குற்றம்சாட்டுகின்றனர்.
சென்னை -- பெங்களூரு அதிவிரைவு தேசிய நெடுஞ்சாலையில் தண்டலம், செட்டிபேடு, பாப்பன்சத்திரம் உட்பட பல கிராமங்கள் அமைந்துள்ளன. இங்குள்ள குடியிருப்பு மற்றும் தொழிற்சாலைகளில் சேகரமாகும் கழிவுநீர், டேங்கர் லாரிகள் மூலம் அப்புறப்படுத்தப்படுகிறது.
இவ்வாறு, லாரிகளில் கொண்டு வரப்படும் கழிவுநீரை, சுத்திகரிப்பு நிலையத்திற்கு எடுத்து செல்லாமல், சென்னை -- பெங்களூரு அதிவிரைவு தேசிய நெடுஞ்சாலையின் இணைப்பு சாலை பகுதியில், செம்பரம்பாக்கம் ஏரிக்கு செல்லும் நீர்வரத்து கால்வாயில் கழிவுநீர் திறந்து விடுகின்றனர்.
இதனால், சென்னை உட்பட பல பகுதிகளுக்கு குடிநீர் வழங்கி வரும் செம்பரம்பாக்கம் ஏரி கழிவுநீர் ஏரியாக மாறி வருவதோடு, அதன் குடிநீர் தரம் பாதிக்கப்பட்டு வருவதாக பகுதிவாசிகள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நீர்வரத்து கால்வாயில் திறந்து விடப்படும் கழிவுநீரை தடுத்து நிறுத்த வேண்டும். மேலும், லாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.