/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
பாதாள சாக்கடையில் அடைப்பு வீட்டு வாசல்களில் தேங்கும் கழிவுநீர்
/
பாதாள சாக்கடையில் அடைப்பு வீட்டு வாசல்களில் தேங்கும் கழிவுநீர்
பாதாள சாக்கடையில் அடைப்பு வீட்டு வாசல்களில் தேங்கும் கழிவுநீர்
பாதாள சாக்கடையில் அடைப்பு வீட்டு வாசல்களில் தேங்கும் கழிவுநீர்
UPDATED : ஆக 01, 2025 01:19 AM
ADDED : ஆக 01, 2025 01:17 AM

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் பஞ்சுகொட்டி தெருவில், பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டு வீட்டு வாசல்களில் கழிவுநீர் தேங்குவதால் சுகாதார சீர்கேடு ஏற்படும் சூழல் உள்ளது.
![]() |
காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட பஞ்சுகொட்டி தெருவில், 50க்கும் மேற்பட்ட வீடுகளும், உணவகம் உள்ளிட்ட பல்வேறு வர்த்தக நிறுவனங்களும் உள்ளன.
இப்பகுதியில், பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டு வீடுகளுக்குள் கழிவுநீர் திரும்பி வருவதால், வீட்டு கழிப்பறை, குளியல் அறை மற்றும் வீட்டு வாசல்களில் கழிவுநீர் தேங்கியுள்ளது.
இதனால், இத்தெருவில் வசிப்போர், ஒரு வாரமாக வீட்டில் உள்ள குளியல் அறை, கழிப்பறையை பயன்படுத்த முடியாத நிலை உள்ளதாக புகார் தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து அப்பகுதியில் வசிப்போர் கூறியதாவது:
பாதாள சாக்கடையில் ஏற்பட்ட அடைப்பு காரணமாக வீடுகளில் உள்ள கழிப்பறை மற்றும் குளியல் அறையை பயன்படுத்த முடியாமல், இயற்கை உபாதைக்கும், குளிக்கவும் உறவினர், நண்பர்கள், மாநகராட்சி பொது கழிப்பறை மற்றும் குளியல் அறையை தேடி அலைய வேண்டிய நிலை உள்ளது.
வீட்டு வாசல்களில் கழிவுநீர் தேங்குவதால், வீடுகளுக்குள் இருந்து வெளியே சென்று வர முடியவில்லை. வீடுகளில் அமர்ந்து சாப்பிட முடியவில்லை.
சுகாதார சீர்கேடு ஏற்படும் சூழல் உள்ளதால், பஞ்சுகொட்டி தெருவில் பாதாள சாக்கடையில் ஏற்பட்டுள்ள அடைப்பை முழுதும் நீக்க, மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
இதுகுறித்து காஞ்சிபுரம் மாநகராட்சி சுகாதார பிரிவு அலுவலர் ஒருவர் கூறியதாவது:
காஞ்சிபுரம் பஞ்சுகொட்டி தெருவில், பாதாள சாக்கடையில் ஏற்பட்டுள்ள அடைப்பு உடனடியாக நீக்கப்படும். மேலும், இப்பகுதியில் அடிக்கடி ஏன் அடைப்பு ஏற்படுகிறது என்பது குறித்து முழுமையாக ஆய்வு செய்து, அதற்கேற்ப நிரந்தரமாக தீ ர்க்க நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.