/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
காஞ்சி மாநகராட்சிக்கு ரூ.75 லட்சத்தில் சாக்கடை அடைப்பு நீக்கும் வாகனம்

ADDED : பிப் 04, 2024 06:46 AM
காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் மாநகராட்சியில், 51 வார்டுகள் உள்ளன. இப்பகுயில் உள்ள தெருக்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப பாதாள சாக்கடையில் ஏற்படும் அடைப்புகளை நீக்க, மாநகராட்சிக்கு கூடுதல் வாகனம் வாங்க வேண்டும் என, கோரிக்கை எழுந்தது.
இதையடுத்து, மாநகராட்சிக்கு அதிநவீன திறன் சக்தி கொண்ட புதிய அடைப்பு நீக்கும் இயந்திர வாகனம் 75 லட்சம் ரூபாய் செலவில் வாங்கப்பட்டது.
இந்த வாகனத்தை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரும் நிகழ்ச்சி நேற்று நடந்தது.
மாநகராட்சி மேயர் மகாலட்சுமி தலைமை வகித்தார். காஞ்சிபுரம் தி.மு.க., - எம்.பி., செல்வம், காஞ்சிபுரம் தி.மு.க., - எம்.எல்.ஏ., எழிலரசன், உத்திரமேரூர் தி.மு.க., - எம்.எல்.ஏ., சுந்தர் ஆகியோர் கொடியசைத்து வாகனத்தை துவக்கி வைத்தனர்.
புதிதாக வாங்கப்பட்டுள்ள பாதாள சாக்கடை அடைப்பு நீக்கும் வாகனம் 8,000 லிட்டர் கழிவுநீரை கொள்ளளவாக கையாளும் அமைப்புடன், அதிநவீன கூடுதல் திறன் கொண்ட உறிஞ்சு குழாய் உள்ளதாகவும், பாதாள சாக்கடையில் உள்ள அடைப்புகளை எளிமைாக அகற்றும் திறன் கொண்டவை.
திடம் மற்றும் திரவ கழிவுகள் மட்டுமின்றி, மணல் போன்ற பொருட்களையும் வேகமாக உறிஞ்சும் தன்மை கொண்டது என, மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.