ADDED : மார் 14, 2026 06:10 AM

அ நிறம் | அளவு
செவிலிமேடு: செவிலிமேடு பிரதான சாலையோரம், மண்திட்டுகளால் துார்ந்த கால்வாயை சீரமைக்க பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
செவிலிமேடு பிரதான சாலையை சுற்றியுள்ள வீடுகளில் இருந்து வெளியேற்றப்படும், வீட்டு உபயோக கழிவுநீர் வெளியேறும் வகையில், சாலையோரம் வடிகால்வாய் உள்ளது.
இந்த கால்வாயை மாநகராட்சி நிர்வாகம் முறையாக பராமரிக்காததால், மண் திட்டுகளால் துார்ந்து, கழிவுகளாலும் அடைப்பு ஏற்பட்டுள்ளது.
இதனால், கழிவுநீர் வெளியேறாமல் ஒரே இடத்தில் தேங்குவதால் அப்பகுதியில் கொசுத்தொல்லை அதிகரித்து உள்ளது.
நோய் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதால் கழிவுநீர் கால்வாயை சீரமைக்க அப்பகுதி மக்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.
