sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

செவிலிமேடு மேம்பாலத்தால் காஞ்சி நெரிசலுக்கு...விமோசனம்!:ரூ.90 கோடியில் ஓரிக்கை சாலை விரிவாக்க திட்டம்

/

செவிலிமேடு மேம்பாலத்தால் காஞ்சி நெரிசலுக்கு...விமோசனம்!:ரூ.90 கோடியில் ஓரிக்கை சாலை விரிவாக்க திட்டம்

செவிலிமேடு மேம்பாலத்தால் காஞ்சி நெரிசலுக்கு...விமோசனம்!:ரூ.90 கோடியில் ஓரிக்கை சாலை விரிவாக்க திட்டம்

செவிலிமேடு மேம்பாலத்தால் காஞ்சி நெரிசலுக்கு...விமோசனம்!:ரூ.90 கோடியில் ஓரிக்கை சாலை விரிவாக்க திட்டம்


ADDED : ஜூலை 07, 2024 12:10 AM

Google News

ADDED : ஜூலை 07, 2024 12:10 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம்:ஓரிக்கை - செவிலிமேடு இடையே, 90 கோடி ரூபாய் செலவில் நான்குவழிச் சாலையை விரிவுபடுத்துவதற்கு, நெடுஞ்சாலைத் துறை திட்டம் தயாரித்து அரசிற்கு அனுப்பி உள்ளது. செவிலிமேட்டில் மேம்பாலம் வருவதால், காஞ்சிபுரம் நகர போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு கிடைக்கும் என, நெடுஞ்சாலைத் துறையினர் தெரிவித்தனர்.

காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய இரு மாவட்டங்களிலும், தேசிய நெடுஞ்சாலை, மாநில நெடுஞ்சாலை, மாவட்ட சாலை, இதர சாலை என, மொத்தம், 2,253 கி.மீ., துார சாலைகள் உள்ளன.

இதுதவிர, 1,292 கி.மீ., ஒன்றிய சாலைகள், 1,694 கி.மீ., துாரம் ஊராட்சி சாலைகள் என, மொத்தம் 5,239 கி.மீ., துார சாலை வகைபாடுகள் உள்ளன.

கடந்த 2021ல், காஞ்சிபுரம் மாவட்டம் நெடுஞ்சாலை துறை கோட்டமாக உருவாக்கப்பட்டு உள்ளது. இதன் அலுவலகம், காஞ்சிபுரம் கலெக்ரேட் பின்புற பகுதியில் இயங்கி வருகிறது. இதன் கட்டுப்பாட்டில், 1,122 கி.மீ., துார சாலைகள் உள்ளன.

இதில், வாகனப் போக்குவரத்து அதிகமாக இருக்கும் சாலைகள் விரிவுபடுத்தும் பணிகள் நடந்து வருகின்றன.

உதாரணமாக, பள்ளூர் - சோகண்டி இடையே, ஒருவழிச் சாலையை, 41 கோடி ரூபாய் செலவில், மேம்படுத்தப்பட்ட இருவழிச் சாலையாக விரிவுபடுத்தப்பட்டு உள்ளது.

அதேபோல, சென்னை - பெங்களூரு தேசிய நான்குவழிச் சாலையை, 634 கோடி ரூபாய் செலவில், ஆறுவழிச் சாலையாக விரிவுபடுத்தும் பணி நடந்த வருகிறது.

சென்னை - கன்னியாகுமரி தொழில் வழித்தட சாலை விரிவாக்கத்திற்கு, 795 கோடி ரூபாய் செலவில், சாலை விரிவுபடுத்தும் பணி நடந்து வருகிறது.

இருப்பினும், காஞ்சிபுரம் போக்குவரத்து நெரிசல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதை தவிர்க்க, ஓரிக்கை முதல், செவிலிமேடு வரையில், 3 கி.மீ., துாரம் மேம்படுத்தப்பட்ட இருவழிச் சாலையை, நான்குவழிச் சாலையாக விரிவுபடுத்தப்பட உள்ளது.

சாலை விரிவுபடுத்துவதற்கு, 70 கோடி ரூபாய் மற்றும் மேம்பாலம் கட்டுவதற்கு, 20 கோடி ரூபாய் என, மொத்தம் 90 கோடி ரூபாய்க்கு திட்ட மதிப்பீடு தயாரித்து அரசு ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டு உள்ளது. ஒப்புதல் கிடைத்த பின், சாலை விரிவுபடுத்தும் பணி துவக்கப்படும்.

குறிப்பாக, ஓரிக்கை - செவிலிமேடு பகுதியில், முகூர்த்த நேரங்கள் மற்றும் போக்குவரத்து மாற்றம் செய்யும் போது, செவிலிமேடு பகுதியில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க மேம்பாலம் அமைய உள்ளது.

இதன் மூலமாக, காஞ்சிபுரம் நகரில் போக்குவரத்து நெரிசல் குறையும் என, நெடுஞ்சாலைத் துறையினர் தெரிவித்தனர்.

இதுகுறித்து, நெடுஞ்சாலைத் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:

ஓரிக்கை - செவிலிமேடு வரை, 3 கி.மீ., துாரத்திற்கு, 90 கோடி ரூபாய் செலவில் நான்குவழிச் சாலை விரிவுபடுத்த திட்டம் தயாரித்து, அரசு ஒப்புதலுக்கு அனுப்பி உள்ளோம்.

இதில், 900 மீட்டர் துாரத்திற்கு மேம்பாலம் கட்டுவதற்கு திட்டத்தையும் நெடுஞ்சாலைத் துறை உயரதிகாரிகளும் பல்வேறு கட்ட ஆய்வுகளை செய்துவிட்டு, சென்று உள்ளனர். விரைவில் ஒப்புதல் கிடைக்கும் என, எதிர்பார்க்கிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us