/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
ஷாலிமர் சிறப்பு ரயில் நவ.,26 வரை நீட்டிப்பு
/
ஷாலிமர் சிறப்பு ரயில் நவ.,26 வரை நீட்டிப்பு
ADDED : செப் 09, 2025 01:02 AM
சென்னை, சென்னை சென்ட்ரல் - மேற்கு வங்க மாநிலம் ஷாலிமர் சிறப்பு ரயில் வரும் நவ., 26ம் தேதி வரை நீட்டித்து இயக்கப்பட உள்ளது.
இது குறித்து, தெற்கு ரயில்வே நேற்று வெளியிட்ட அறிக்கை:
ஆயுதபூஜை, தீபாவளி என பண்டிகை நாட்கள் வரவுள்ளதால், நெரிசல் மிக்க வழித்தடங்களில் சிறப்பு ரயில்கள் நீட்டித்து இயக்கப்படுகின்றன
மேற்கு வங்க மாநிலம் ஷாலிமர் - சென்ட்ரலுக்கு வாரந்தோறும் திங்கள்கிழமைகளில் மாலை 6:30 மணிக்கு இயக்கப்படும் சிறப்பு ரயில், நவ., 24ம் தேதி வரை நீட்டித்து இயக்கப்பட உள்ளது
சென்ட்ரலில் இருந்து ஷாலிமருக்கு புதன்கிழமைகளில் அதிகாலை 4:30 மணிக்கு இயக்கப்படும் சிறப்பு ரயில், நவ., 26ம் தேதி வரை நீட்டித்து இயக்கப்பட உள்ளது. மேற்கண்ட சிறப்பு ரயில்களில் இன்று காலை 8:00 மணிக்கு முன்பதிவு துவங்கும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.