ADDED : ஏப் 18, 2025 08:14 PM
ஏனாத்துார்:காஞ்சிபுரம் அடுத்த, ஏனாத்துாரில் உள்ள சங்கரா கலை மற்றும் அறிவியல் கல்லுாரியின் ஆண்டு விழா மற்றும் 2024 - -25ம் ஆண்டில் கல்வியில் சிறந்து விளங்கிய மாணவர்களுக்கு விருது வழங்கும் விழா நடந்தது.
சென்னை பல்கலைக்கழக இந்திய வரலாற்று துறை தலைவர் மற்றும் ஆட்சி மன்ற குழு உறுப்பினர் பேராசிரியர் முனைவர் எஸ்.எஸ். சுந்தரம், சுவாமி தயானந்தா கலை அறிவியல் கல்லூரியின் வளர்ச்சி மற்றும் நிர்வாகக் குழு இயக்குநர் முனைவர் எஸ்.ராமநாதன் ஆகியோர், சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர்.
தமிழ், ஆங்கிலம், கணிதம், இயற்பியல், உயிர்ம வேதியியல், நுண்ணுயிரியல், உயிரி தொழில்நுட்பவியல், கணினி அறிவியல்,கணினி பயன்பாட்டுவியல், வணிகவியல், நிர்வாக மேலாண்மை உள்ளிட்ட துறைகளில் கல்வியில் சிறந்து விளங்கிய மாணவர்களுக்கும், நாட்டுநலப்பணி திட்டம் மற்றும் தேசிய மாணவர் படை ஆகியவற்றில் சாதனை புரிந்த 100க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கும் விருது மற்றும் சான்றிதழ் வழங்கி பேசினர்.
முன்னதாக, கல்லுாரி முதல்வர் முனைவர் கலைராம வெங்கடேசன் வரவேற்றார். தமிழ் துறை தலைவர் முனைவர் ராதாகிருஷ்ணன் நன்றி கூறினார்.