/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
வேடபாளையம் நெடுஞ்சாலையில் வழிகாட்டி பலகை அமைப்பு
/
வேடபாளையம் நெடுஞ்சாலையில் வழிகாட்டி பலகை அமைப்பு
ADDED : மே 07, 2025 01:08 AM

உத்திரமேரூர்:புக்கத்துறை -- மானாம்பதி நெடுஞ்சாலை 32 கி.மீ., துாரமுடையது. இந்த நெடுஞ்சாலையை பயன்படுத்தி, தினமும், ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் பல்வேறு பகுதிகளுக்கு சென்று வருகின்றன.
இருவழிச் சாலையாக இருந்த இச்சாலை, 2022ல் நான்குவழிச் சாலையாக விரிவாக்கம் செய்யப்பட்டது.
சாலையின் நடுவே மையத்தடுப்புகள் அமைக்கப்பட்டு, அதன்மீது அரளி செடிகள் நடப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றன.
பின், வாகன ஓட்டிகள் பாதுகாப்பாக பயணம் செய்ய, சாலையோரங்களில் போக்குவரத்து விதிமுறைகள் அடங்கிய விழிப்புணர்வு பதாகைகள் ஆங்காங்கே வைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், வேடபாளையம் பகுதியில் செல்லும் நெடுஞ்சாலையில், நெடுஞ்சாலைத் துறை சார்பில், புதிதாக வாகன வழிகாட்டி பலகை அமைக்கப்பட்டுள்ளது.
இந்த பலகையை பயன்படுத்தி வாகன ஓட்டிகள், எளிதாக பல்வேறு பகுதிகளுக்கு செல்கின்றனர். மேலும், இந்த நெடுஞ்சாலையில் கூடுதலாக வாகன வழிகாட்டி பலகைகள் அமைக்கப்பட உள்ளதாக, நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.