/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
ஒரகடம் நெடுஞ்சாலையில் வழிகாட்டி பலகை சேதம்
/
ஒரகடம் நெடுஞ்சாலையில் வழிகாட்டி பலகை சேதம்
ADDED : ஜன 08, 2025 09:31 PM

ஸ்ரீபெரும்புதுார்:ஸ்ரீபெரும்புதுார் - சிங்கபெருமாள் கோவில் ஆறு வழி மாநில நெடுஞ்சாலை, 25 கி.மீ., துாரம் உடையது. திருச்சி தேசிய நெடுஞ்சாலை, வண்டலுார் - வாலாஜாபாத் சாலை, சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலைகளை இணைக்கும் முக்கிய சாலையாக உள்ளது.
ஒரகடம், வல்லம், ஸ்ரீபெரும்புதுார் சிப்காட் தொழிற் பூங்காவிற்கு செல்லும் பல ஆயிராம் வாகனங்கள் நாள்தோறும் சென்று வருகின்றன. தவிர, ஒரகடம் சுற்றுவட்டாரத்தில் உள்ள 15 க்கும் மேற்பட்ட கிராமத்தை சேர்ந்த மக்கள் இந்த சாலையை பயன்படுத்தி வருகின்றனர்.
இந்த சாலையில், வாகன ஓட்டிகளுக்கு வழிகாட்டும் வகையில், முக்கிய சந்திப்புகளில் சாலையின் நடுவே, திசை காட்டும் அறிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில், ஸ்ரீபெரும்புதுார் - சிங்கபெருமாள் கோவில் சாலையில், ஒரகடம் சந்திப்பு அருகே, நிசான் தொழிற்சாலை முன், சாலையில் நடுவே வைக்கப்பட்டுள்ள வழிகாட்டும் அறிப்பு பலகை, 6 மாதங்களாக சேதமடைந்து பெயர்ந்து உள்ளது.
காற்று வேகமாக வீசும் போது, அறிப்பு பலகை மேலும் பெயர்ந்து, நெடுஞ்சாலையில் செல்லும் வாகன ஓட்டிகளின் மீது விழும் அபாயம் உள்ளது. இதனால், அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் விபத்து ஏற்படும் அச்சத்தில் சென்று வருகின்றனர்.
எனவே சேதமடைந்துள்ள அறிப்பு பலகையை சீரமைக்க, நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.