வாகனத்தில் வெள்ளி தகடு மாயம்: வழக்கு ஒத்தி வைப்பு
வாகனத்தில் வெள்ளி தகடு மாயம்: வழக்கு ஒத்தி வைப்பு
ADDED : ஏப் 27, 2026 11:05 PM
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில், சுவாமி வீதியுலா வாகனங்களில் இருந்த வெள்ளி தகடு மாயமான வழக்கு தொடர்பான விசாரணை, மே 13ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில் உள்ள வெள்ளி மூஷிக வாகனம் மற்றும் வெள்ளி ரிஷப வாகனம் ஆகிய இரு வாகனங்களில் இருந்து, வெள்ளி தகடுகள் பிரித்து எடுக்கப்பட்டு மாயமானது.
இதையடுத்து, காஞ்சிபுரத்தைச் சேர்ந்த டில்லிபாபு என்பவர், அறநிலையத் துறை கமிஷனருக்கு புகார் அளித்தார். அப்போதைய நகை சரிபார்ப்பு துணை கமிஷனர் தலைமையில் குழுவினர், வெள்ளி தகடு குறித்து கணக்கெடுப்பு மற்றும் கோவில் பணியாளர்களிடம் கேட்டறிந்தனர்.
இது தொடர்பாக, கோவில் செயல் அலுவலர் முத்துலட்சுமி, அர்ச்சகர்கள் பாலசுப்பிரமணி பட்டர், கணேசன், விநாயகமூர்த்தி ஆகியோர் ஆஜராகும்படி, காஞ்சிபுரம் குற்றவியல் நீதிமன்றம் சம்மன் அனுப்பி இருந்தது.
மேற்கண்ட நான்கு பேரும் காஞ்சிபுரம் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி இனியா முன், நேற்று ஆஜராகினர். வழக்கு விசாரணை மே 13ம் தேதி விசாரிக்கப்படும் என, நீதிபதி ஒத்திவைத்தார்.
