/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
சார் -- பதிவாளர் அலுவலகம் ஸ்ரீபெரும்புதுாரில் திறப்பு
/
சார் -- பதிவாளர் அலுவலகம் ஸ்ரீபெரும்புதுாரில் திறப்பு
சார் -- பதிவாளர் அலுவலகம் ஸ்ரீபெரும்புதுாரில் திறப்பு
சார் -- பதிவாளர் அலுவலகம் ஸ்ரீபெரும்புதுாரில் திறப்பு
ADDED : மார் 07, 2025 12:43 AM

ஸ்ரீபெரும்புதுார்:ஸ்ரீபெரும்பதுாரில், 1.85 கோடி செலவில் புதிதாக கட்டப்பட்ட சார்- - பதிவாளர் அலுவலகத்தை, தமிழக முதல்வர் ஸ்டாலின், 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக நேற்று திறந்து வைத்தார்.
ஸ்ரீபெரும்புதுார் பகுதியில், திருவள்ளூர் சாலையில் இயங்கி வந்த ஸ்ரீபெரும்புதுார் சார் -- பதிவாளர் அலுவலக கட்டடம் சேதமடைந்ததை அடுத்து, 1.85 கோடி ரூபாய் மதிப்பில், புதிய சார் -- பதிவாளர் அலுவலகம் கட்டடம் கட்டும் பணி, கடந்த ஆண்டு பிப்., மாதம் துவங்கியது.
ஸ்ரீபெரும்புதுார் சார் -- பதிவாளர் அலுவலகம், ஸ்ரீபெரும்புதுார் நகராட்சிக்குட்பட்ட திருமங்கையாழ்வார் சாலையில் தற்காலிகமாக மாற்றி அமைக்கப்பட்டு செயல்பட்டு வந்தது.
இந்த நிலையில், மூன்று தளங்களை கொண்ட புதிய சார் -- பதிவாளர் அலுவகத்தின், கட்டுமான பணிகள் கடந்த நவ., மாதம் நிறைவு பெற்றன.
இந்த அலுவலக கட்டடத்தை, தமிழக முதல்வர் ஸ்டாலின், வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக நேற்று திறந்து வைத்தார். இதற்காக, ஸ்ரீபெரும்புதுார் புதிய சார் -- பதிவாளர் அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில், ஸ்ரீபெரும்புதுார் வருவாய் கோட்டாட்சியர் சரவணக்கண்ணன், ஸ்ரீபெரும்புதுார் நகராட்சி தலைவர் சாந்தி, ஸ்ரீபெரும்புதுார் ஒன்றிய பிரதிநிதிகள் மற்றும் பதிவுத்துறை அதிகாரிகள் பலர் பங்கேற்றனர்.