/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
சார் -- பாதிவாளர் அலுவலகத்திற்கு வரும் வாகனங்களால் ஸ்ரீபெரும்புதுாரில் நெரிசல்

ADDED : அக் 23, 2024 12:49 AM

ஸ்ரீபெரும்புதுார்:ஸ்ரீபெரும்புதுார் பகுதியில் உள்ள திருவள்ளூர் சாலையில், ஸ்ரீபெரும்பதுார் சார் -- பதிவாளர் அலுவலகம் இயங்கி வந்தது. இந்த அலுவலக கட்டடம் சேதமடைந்ததை அடுத்து, 1.85 கோடி ரூபாய் மதிப்பில், புதிதாக சார் -- பாதிவாளர் அலுவலக கட்டடம் கட்டும் பணி, கடந்த செப்., மாதம் துவங்கியது.
இதனால், ஸ்ரீபெரும்புதுார் சார் -- பதிவாளர் அலுவலகம், ஸ்ரீபெரும்புதுார் பேரூராட்சிக்கு உட்பட்ட திருமங்கையாழ்வார் சாலையில், தற்காலிகமாக மாற்றி அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.
இந்த நிலையில், சார் -- பதிவாளர் அலுவலகத்திற்கு பத்திரப்பதிவு செய்ய வருவோர் தங்களின் இருசக்கர வாகனம், கார் உள்ளிட்ட வாகனங்களை, திருமங்கையாழ்வார் சாலையின் இருபுறமும் ஆக்கிரமித்து நிறுத்துகின்றனர்.
இதனால், இந்த சாலையில் அகலம் குறைந்து, எதிரே வரும் வானங்களுக்கு வழிவிட்டு செல்ல முடியாமல், வானக ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர். இதனால், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
எனவே, திருமங்கையாழ்வார் சாலையில் போக்குவரத்திற்கு இடையூறாக நிறுத்தப்படும் வாகனங்களுக்கு மாற்று ஏற்பாடு செய்ய, போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.