வாலாஜாபாத் நுாலகத்திற்கு இடம் தேர்வு பணி தொடக்கம்
வாலாஜாபாத் நுாலகத்திற்கு இடம் தேர்வு பணி தொடக்கம்
ADDED : ஜூன் 06, 2026 03:41 AM
அ நிறம் | அளவு
காஞ்சிபுரம்: வாலாஜாபாத் நுாலக கட்டடத்திற்கு, புதிய இடம் தேர்வு செய்யும் பணி தொடங்கப்பட்டு உள்ளதாக, நுாலகத்துறையினர் தெரிவித்தனர்.
வாலாஜாபாத் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாக கட்டடத்தில், வாலாஜாபாத் தற்காலிக நுாலக கட்டடம் இயங்கி வருகிறது. பள்ளி வேலை நாட்களில், நுாலகத்திற்கு செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
வாலாஜாபாத் நுாலகத்திற்கு சொந்த கட்டட வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என, ம.தி.மு.க., வாலாஜாபாத் நகர செயலர் சிவகுமார், கலெக்டரிடம் மனு அளித்தார்.
அந்த மனுவை ஆய்வு செய்த நுாலகத்துறையினர் இடம் தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், புதிய இடம் தேர்வு செய்து பேரூராட்சி நிர்வாகம் ஒப்புதல் பெறப்பட்டு, புதிய கட்டடம் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என, நுாலகத்துறையினர் தெரிவித்தனர்.
