தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ கட்டுமான தொழிலாளர் குழந்தைகளுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி: கலெக்டர்

 கட்டுமான தொழிலாளர் குழந்தைகளுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி: கலெக்டர்

 கட்டுமான தொழிலாளர் குழந்தைகளுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி: கலெக்டர்


ADDED : பிப் 12, 2026 05:37 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 12, 2026 05:37 AM


Follow on Google
அ நிறம் | அளவு

காஞ்சிபுரம்: கட்டுமான தொழிலாளர்களின் குழந்தைகள், இணையவழி திறன் மேம்பாட்டு பயிற்சியில் சேர காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி அழைப்பு விடுத்துள்ளார்.

காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி வெளியிட்ட செய்திக்குறிப்பு:

காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த தொழிலாளர்களின் குழந்தைகளின் உயர்கல்வி உதவித்தொகை பெறும் மாணவ- - மாணவியருக்கு, சென்னை, தமிழ்நாடு கட்டுமான கழக அலுவலகம் மூலம் 40 பயிற்சி பிரிவுகளில் இணையவழியில் திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

இந்த பயிற்சி வகுப்பில் பங்கேற்க விரும்பும் மாணவ- - மாணவியர் நடப்பு கல்வி ஆண்டில் பட்டப்படிப்பு அல்லது பட்டமேற்படிப்பு படிப்பவர்களாக இருக்க வேண்டும்.

கட்டுமானத் தொழிலாளர்களின் இரண்டு குழந்தைகளுக்கு மட்டும் இந்த திட்டத்தின் கீழ் பயிற்சி அளிக்கப்படும். இந்த பயிற்சி வகுப்புக்கு விண்ணப்பிக்க விரும்பும் மாணவ- - மாணவியர் தங்களின் தாய் அல்லது தந்தையின் அனைத்து அசல் ஆவணங்களுடன், காஞ்சிபுரம் ஓரிக்கையில் அமைந்துள்ள, தொழிலாளர் உதவி ஆணையர், சமூக பாதுகாப்புத் திட்ட அலுவலகத்துக்கு நேரில் வந்து விண்ணப்பங்களை பெற்றுக் கொள்ளலாம்.

விண்ணப்பம் பூர்த்தி செய்து அதே அலுவலகத்தில் வழங்க வேண்டும்.

மேலும் விபரங்களுக்கு 044 -29593177 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் அல்லது https://registration.tnbocw.com என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us