/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
கால்வாய் இல்லாத சிறுபாலம் தத்தனுாரில் வெள்ள அபாயம்
/
கால்வாய் இல்லாத சிறுபாலம் தத்தனுாரில் வெள்ள அபாயம்
கால்வாய் இல்லாத சிறுபாலம் தத்தனுாரில் வெள்ள அபாயம்
கால்வாய் இல்லாத சிறுபாலம் தத்தனுாரில் வெள்ள அபாயம்
ADDED : அக் 23, 2024 12:52 AM

ஸ்ரீபெரும்புதுார்:ஸ்ரீபெரும்புதுார் ஒன்றியத்தில் தத்தனுார் ஊராட்சி அமைந்துள்ளது. ஸ்ரீபெரும்புதுார் -- சிங்கபெருமாள் கோவில் நெடுஞ்சாலையில், போந்துார் அடுத்த தெரேசாபுரத்தில் இருந்து தத்தனுார் சாலை பிரிந்து செல்கிறது.
இந்த சாலை வழியே, கடுவஞ்சேரி, குண்டுபெரும்பேடு, வளத்தான்சேரி, பேரிஞ்சம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளுக்கு தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன.
தத்தனுார் பகுதியில் மழைக்காலங்களில் தண்ணீர் வீடுகளை சூழ்ந்து, வெள்ள பாதிப்பு ஏற்பட்டு வந்தது. வெள்ள பாதிப்பை தடுக்க, தத்தனுார் சாலை குறுக்கே, 17 லட்சம் ரூபாயில் சிறுபாலம் கட்டப்பட்டது.
இதையடுத்து, அப்பகுதியில் மழையால் வெள்ள பாதிப்பு ஏற்படுவது தடுக்கப்படும் என, அப்பகுதியினர் மகிழ்ச்சி அடைந்தனர். ஆனால், பாலம் கட்டுமான பணிகள் முடிவடைந்த நிலையில், மழைநீர் செல்ல கால்வாய் ஏற்படுத்தவில்லை.
இதன் காரணமாக, அப்பகுதியில் உள்ள தனியார் நில உரிமையாளர்கள், கால்வாய் வழித்தடத்தில் மண்ணை கொட்டி மூடிவிட்டனர். இதனால், அப்பகுதியில் மீண்டும் மழைநீர் தேங்கி, வெள்ள பாதிப்பு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
எனவே, பருவ மழை துவங்குவதற்கு முன், மழைநீர் சீராக செல்லும் வகையில் கால்வாய் வழித்தடத்தை ஏற்படுத்த வேண்டுமென, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

