ADDED : மார் 21, 2026 08:35 PM

அ நிறம் | அளவு
காஞ்சிபுரம்:மார்ச் மாதம் நிறைவு பெறவிருக்கும் நிலையிலும், பனிப்பொழிவு கிராமப்புறங்களில் அதிகமாக உள்ளது.
நவ., டிச., ஆகிய மாதங்களில், மழைக்காலம் பெய்து முடிந்த பின், ஜன., பிப்., ஆகிய மாதங்களில் பனி பொழிவு அதிகமாக இருக்கும். மார்ச் மாதம் கோடைக்காலம் துவங்கும் போது, பனிப்பொழிவு மெல்ல மெல்ல மறையும். சில தினங்களாக, கிராமங்களில் பனிப்பொழிவு அதிகமாக காணப்படுகிறது.
குறிப்பாக, அதிகாலையில் பனிப்பொழிவு, சாலையில் செல்லும் வாகனங்கள் எதிரே வரும் வாகனங்கள் தெரியாக அளவிற்கு பனிப்பொழிவு அதிகமாக உள்ளது.
இதுதவிர, அறுவடைக்கு தயாராக இருக்கும் நெற்கதிர்கள் மீது பனிப்படலம் படர்ந்து, தவழ்ந்து செல்லவதால், காண்போரை கண்கவரும் வகையிலும், மார்ச் மாதத்திலும் பனிப்பொழிவு இருக்கிறதா என, ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.
